பள்ளியில் தீ விபத்து 20 மாணவியர் பலி

தினமலர்  தினமலர்
பள்ளியில் தீ விபத்து 20 மாணவியர் பலி

ஜார்ஜ்டவுன்,-கயானாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 20 மாணவியர் பலியாகினர்; ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

தென் அமெரிக்க நாடான கயானாவில் உள்ள மாஹ்தியா நகரில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள மாணவியர் விடுதியில், நேற்றிரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், 20 மாணவியர் பலியாகினர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில், ஏழு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் எண அஞ்சப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த போது இடியுடன் மழை பெய்ததால், காயமடைந்த மாணவியரை 'ஏர் ஆம்புலன்ஸ்' வாயிலாக சிகிச்சைக்கு அனுப்பி வைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

ஜார்ஜ்டவுன்,-கயானாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 20 மாணவியர் பலியாகினர்; ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தென் அமெரிக்க நாடான கயானாவில் உள்ள மாஹ்தியா நகரில் பள்ளி ஒன்று

மூலக்கதை