ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபடுவர் முதல்வர் ஜெகன்மோகன்-திருப்பதி எம்எல்ஏ பேச்சு

தினகரன்  தினகரன்
ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபடுவர் முதல்வர் ஜெகன்மோகன்திருப்பதி எம்எல்ஏ பேச்சு

திருப்பதி : ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபடுபவர் முதல்வர் ஜெகன்மோகன் என திருப்பதி எம்எல்ஏ கருணாகர  பேசினார்.திருப்பதி இந்திரா மைதானத்தில், ஒய்எஸ்ஆர் ஆசரா திட்டத்தின் கீழ் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 3வது தவணையாக காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், எம்எல்ஏ  கருணாகர , மாநகராட்சி ஆணையர் அனுபமா அஞ்சலி, துணை மேயர் முத்ரா நாராயணா, கார்ப்பரேட்டர்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், எம்எல்ஏ கருணாகர  மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ₹8.12 கோடிக்கான காசோலை வழங்கி பேசியதாவது:ஆந்திர மாநிலத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து முதல்வர் ஜெகன்மோகன் தனது  பாதயாத்திரையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நிலுவையில் உள்ள கடன் பாக்கியை அரசு முழுமையாக செலுத்தி வருகிறது. ஏப்ரல்-2019 நிலவரப்படி 4 தவணைகளில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கிக்கணக்கில் நேரடியாக திரும்ப செலுத்தப்பட்டு வருகிறது.ஏற்கனவே, 2 தவணைகளாக திரும்ப செலுத்தப்பட்டு நிலையில் தற்போது ₹6,419.89 கோடி வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தவணையில் 98,395 மகளிர் சுயஉதவி குழுக்கள் பயன்பெறும் வகையில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. தனது பாதயாத்திரையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் முதல்வர் ஜெகன்மோகன் மீது பொய் வழக்கு போட்டு மக்களை தவறாக வழிநடத்த சந்திரபாபு நாயுடு முயற்சிக்கிறார்.சந்திரபாபுவை நம்பும் நிலையில் மக்கள் இல்லை. ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபடும் முதல்வர் ஜெகன்மோகன் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. பொது நிர்வாகத்தை நடத்தி வரும் முதல்வருக்கு மக்கள் அனைவரும்  பக்கபலமாக நிற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, திருப்பதி மாநகராட்சி ஆணையர் அனுபமா அஞ்சலி பேசுகையில், திருப்பதி நகரில் ஏற்கனவே 2 தவணைகளில் தகுதி பெற்ற 3,227 மகளிர் குழுக்களை சேர்ந்த 28,763 பேருக்கு ₹126.32 கோடியும், முதல் 2 தவணையாக ₹63.16 கோடியும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இன்று(நேற்று) ₹31.58 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மூலக்கதை