பினராயி விஜயனின் நிதி முறைகேடு வழக்கு: 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றம்

திருவனந்தபுரம், நிவாரண நிதியில் முறைகேடு செய்ததாக பினராயி விஜயன் மீது தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகளின் தீர்ப்பில் மாறுபட்ட கருத்து இருந்ததால், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
20 லட்சம் ரூபாய்
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சியில் முதல்வர் பேரிடர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
மாறுபட்ட கருத்து
சிவில் நடைமுறை சட்டப்படி விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற நிலையில், அது வெளியாகாதது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கில் கேரளா லோக் ஆயுக்தா நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:
கேரள லோக் ஆயுக்தா சட்டம், 1999ன் விதிகளின் கீழ், கேபினட் உறுப்பினர் என்ற முறையில், பினராயி விஜயன் மீது நடவடிக்கை எடுப்பதிலான அடிப்படை பிரச்னையில், நீதிபதிகளான எங்களிடையே மாறுபட்ட கருத்து உள்ளது. ஆகையால் இந்த வழக்கு, மூன்று நீதிபதி கள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், நிவாரண நிதியில் முறைகேடு செய்ததாக பினராயி விஜயன் மீது தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகளின் தீர்ப்பில் மாறுபட்ட கருத்து இருந்ததால், மூன்று நீதிபதிகள் அடங்கிய
மூலக்கதை
