திராவிட மாடல் ஆட்சியாளர்கள் இதை உணர்ந்தால் தமிழை மீட்க முடியும்

தினமலர்  தினமலர்
திராவிட மாடல் ஆட்சியாளர்கள் இதை உணர்ந்தால் தமிழை மீட்க முடியும்



சினிமா இயக்குனரும், நடிகருமான தங்கர்பச்சான் அறிக்கை:

ஹிந்தி மொழியை எதிர்ப்பதால் மட்டும், தமிழ் மொழியை காப்பாற்றி விட முடியாது. பேச்சிலும், அன்றாடம் நடைமுறை நிகழ்வுகளிலும், தமிழ் கையாளப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் உலக வங்கியில் கடன் வாங்குவது போல், கடன் வாங்கி நாம் மறந்து கொண்டிருக்கும் தாய் மொழியை மீட்க முடியாது.

ஒரு வாசகம் சொன்னாலும், திருவாசகம் மாதிரி சொல்லிட்டாரு... இதை, 'திராவிட மாடல்' ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்பட்டாலே, மெல்ல தமிழினி சாகாம தடுக்க முடியும்!

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: '

புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகாதாரத் துறை ஆய்வாளர்கள், ஏப்ரல், 3-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. புதிய நோய்கள் உருவாகி வரும் நிலையில், சுகாதார ஆய்வாளர்களின் பணிக்கு, தமிழக அரசு உரிய மரியாதை வழங்க வேண்டும். அவர்களுடன் பேச்சு நடத்தி, போராட்டத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு துறையில் ஏற்கனவே இருக்கிற பணியிடங்களையே, 'அவுட்சோர்சிங்'கில் ஏலம் விடலாமான்னு யோசனை பண்ணிட்டு இருக்காங்க... இதுல, புதிய பணியிடங்களை உருவாக்குவது எல்லாம் குதிரை கொம்பு தான்!

அ.தி.மு.க., நிர்வாகி அப்சராரெட்டி அறிக்கை:

அமித் ஷா போன்ற தலைவர்கள், பா.ஜ.,வை கண்ணியத்துடன்வழிநடத்தும் நிலையில், அக்கட்சியின் தமிழக தொண்டர்கள் ஏன், இந்தளவுக்கு கீழிறங்கி பேசுகின்றனர். அரசியல் கூட்டணிகள், குழந்தைத்தனமான கோபம் மற்றும் கருத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

'கூட்டணி என்பதற்காக, கொள்கையை அடகு வைக்க வேண்டாம்' என, தமிழக பா.ஜ.,வினர் குரல் கொடுக்கக் கூடாதுன்னு சொல்றாரோ?

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:

தமிழகத்தில் நடந்த பிளஸ் 2 கணித பாடத் தேர்வில் மூன்று வினாக்கள், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. இதனால்,மாநில பாடத்திட்ட நுால்களை மட்டும் படித்து தேர்வு எழுதிய மாணவர்களால், முழு மதிப்பெண்களை எடுக்க முடியாது என்று கூறப்படுகிறது.

இது நியாயமல்ல. வினாத்தாள் தயாரிப்பு குழுவினர், அவர்களின் திறமையை காட்டுவதற்காக மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்க கூடாது. மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, அவர்களுக்கு உரிய அளவில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும். பள்ளிக்கல்வித் துறையில் என்ன நடக்குது என அமைச்சர் மகேஷுக்கு தெரியுமா அல்லது தெரிஞ்சும் தெரியாம, உதயநிதி பின்னாடியே ஓடியாடிக் கொண்டிருக்கிறாரா?

சினிமா இயக்குனரும், நடிகருமான தங்கர்பச்சான் அறிக்கை: ஹிந்தி மொழியை எதிர்ப்பதால் மட்டும், தமிழ் மொழியை காப்பாற்றி விட முடியாது. பேச்சிலும், அன்றாடம் நடைமுறை நிகழ்வுகளிலும்,

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

மூலக்கதை