மதப்பிரசாரம் செய்ய முயன்ற பால் தினகரன்: இலங்கையில் ‛ பாஸ்போர்ட்' பறிமுதல்

தினமலர்  தினமலர்
மதப்பிரசாரம் செய்ய முயன்ற பால் தினகரன்: இலங்கையில் ‛ பாஸ்போர்ட் பறிமுதல்

கொழும்பு: இலங்கைக்கு வர்த்தக விசாவில் சென்று மதப்பிரசாரம் செய்து, மக்களை திசை திருப்ப முயன்ற பால் தினகரன் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.

இயேசு அழைக்கிறார் (ஜீசஸ் கால்ஸ்) என்ற அமைப்பை கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரன் நடத்தி வருகிறார். இவர் கடந்த வாரம் வர்த்தக விசாவில் இலங்கைக்கு சென்றுள்ளார். அவருடன் அவரது ஜீசஸ் கால்ஸ் குழுவும் சென்றுள்ளது. இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள மணிபே மற்றும் ரசவின் பகுதிகளில் 3 நாட்கள் மதப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஜீசஸ் கால்ஸ் குழுவினர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். இதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள சிவசேனா அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

புகார்:

வர்த்தக விசாவில் இலங்கை வந்துள்ள பால் தினகரன், இங்கு மதப் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதிக்க கூடாது என சிவசேனா அமைப்பினர் அப்பகுதி மக்களிடையே வலியுறுத்தினர். இது குறித்து மணிபே பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள், யாழ்ப்பாண போலீஸ் டிஐஜி.க்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

பறிமுதல்:

அதன் படி, யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு, வந்தடைந்த பால் தினகரன் மற்றும் அவருடைய குழுவினரை குடியேற்றத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் அனைவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர். மேலும், மதப் பிரச்சாரத்தில் ஈடுபடகூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.

கொழும்பு: இலங்கைக்கு வர்த்தக விசாவில் சென்று மதப்பிரசாரம் செய்து, மக்களை திசை திருப்ப முயன்ற பால் தினகரன் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.nsimg3276513nsimgஇயேசு அழைக்கிறார் (ஜீசஸ் கால்ஸ்)

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

மூலக்கதை