தூதரகம் முற்றுகை விவகாரம்: இந்திய வம்சாவளியினர் பேரணி

தினமலர்  தினமலர்
தூதரகம் முற்றுகை விவகாரம்: இந்திய வம்சாவளியினர் பேரணி

வாஷிங்டன்-அமெரிக்காவில் இந்திய துாதரகம் காலிஸ்தான் ஆதரவாளர்களால் முற்றுகையிடப்பட்டதைக் கண்டித்து, நுாற்றுக்கணக்கான இந்திய வம்சாவளியினர் மூவர்ணக் கொடியுடன் நேற்று பேரணி நடத்தினர்.

பஞ்சாபில், தனி நாடு கேட்கும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான அம்ரித்பால் சிங்கை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காலிஸ்தான் அமைப்பினர், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துாதரகத்தை சமீபத்தில் முற்றுகையிட்டனர்.

தடுப்புகளை உடைத்து அதிரடியாக உள்ளே புகுந்தவர்கள், அங்கிருந்த மூவர்ண கொடியை இறக்கிவிட்டு, காலிஸ்தான் கொடியை ஏற்றினர்.

இதை துாதரக அதிகாரிகள் சில நிமிடங்களிலேயே இறக்கி அப்புறப்படுத்தினர்.

இந்த விவகாரம், உலகம் முழுதும் வாழும் இந்தியர்களை அதிர்ச்சிஅடைய செய்தது.

இந்த சம்பவத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, துாதரகத்தில் பாதுகாப்பை அமெரிக்க அரசு பலப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில், அமெரிக்காவில் உள்ள நம் துாதரகம் அருகே நேற்று ஒற்றுமை பேரணி நடந்தது.

இங்கு வசிக்கும் சீக்கியர்கள் உட்பட அனைத்து மதத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் நுாற்றுக்கணக்கானோர், மூவர்ண கொடியை ஏந்தி, வந்தே மாதரம் முழங்கி ஊர்வலமாக சென்றனர்.

வாஷிங்டன்-அமெரிக்காவில் இந்திய துாதரகம் காலிஸ்தான் ஆதரவாளர்களால் முற்றுகையிடப்பட்டதைக் கண்டித்து, நுாற்றுக்கணக்கான இந்திய வம்சாவளியினர் மூவர்ணக் கொடியுடன் நேற்று பேரணி

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

மூலக்கதை