36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட்!

தினகரன்  தினகரன்
36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எல்.வி.எம்.3எம்.3 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் பிரம்மாண்ட \'எல்.வி.எம்.3-எம்.3\' ராக்கெட், 43.5 மீட்டர் உயரமும், 643 டன் எடையும் கொண்டது இந்த எல்.வி.எம்3 - எம்3 ராக்கெட் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிக எடையை தூக்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் \'எல்.வி.எம்3-எம்3\' என்ற ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது. இந்த ராக்கெட் \'ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3\' என்று அழைக்கப்பட்டது. இதில் ஒன்வெப் இந்தியா-2க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தபட்டு உள்ளது. இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 43.5 மீட்டர் உயரமும், 643 டன் எடையும் கொண்டது இந்த எல்.வி.எம்3 - எம்3 ராக்கெட் 5.9 டன் எடை கொண்ட 36 செயற்கைக்கோள்களை தாழ்வான புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 450 கி.மீ. தொலைவில் 87.4 டிகிரியில் புவி சுற்றுவட்ட பாதையில் செயற்கைகோள்கள் நிலைநிறுத்தப்படவுள்ளது.

மூலக்கதை