76 ரன்னில் சுருண்டது இலங்கை முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி

தினகரன்  தினகரன்
76 ரன்னில் சுருண்டது இலங்கை முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி

ஆக்லாந்து: இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து 198 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீசியது. நியூசிலாந்து 49.3 ஓவரில் 274 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஃபின் ஆலன் 51, வில் யங் 26, டேரில் மிட்செல் 47, கிளென் பிலிப்ஸ் 39, ரச்சின் ரவிந்திரா 49 ரன் விளாசினர். இலங்கை பந்துவீச்சில் சமிகா கருணரத்னே 4, ரஜிதா, லாகிரு தலா 2, மதுஷங்கா, ஷனகா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 19.5 ஓவரிலேயே 76 ரன்னுக்கு சுருண்டு 198 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. ஏஞ்சலோ மேத்யூஸ் 18, சமிகா கருணரத்னே 11, லாகிரு குமாரா 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். நியூசி. பந்துவீச்சில் ஹென்றி ஷிப்லி 7 ஓவரில் 31 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். டேரில் மிட்செல், பிளேர் டிக்னர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஷிப்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நாளை மறுநாள் நடக்கிறது.

மூலக்கதை