லண்டன் நாடாளுமன்ற சதுக்கம் அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டம்

தினகரன்  தினகரன்
லண்டன் நாடாளுமன்ற சதுக்கம் அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டம்

லண்டன்: தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் லண்டனில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பல்வேறு நாடுகளிலும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அமெரிக்கா மற்றும் கனடாவில் கடந்த சில நாட்களாக இவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில்  இதேபோன்று புதனன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தூதரகத்தை நோக்கி கண்ணாடி பாட்டில்களை வீசி எறிந்தனர். இதனை இந்திய தூதரகம் மறுத்தது. இந்நிலையில் லண்டன் நாடாளுமன்ற சதுக்கம் அருகிலும் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலிஸ்தான் கொடி எனக் கூறப்படுவதை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டனர்.

மூலக்கதை