திருமணத்திற்குப் பிறகு கிளாமர் நடனத்தில் சாயிஷா

தினமலர்  தினமலர்
திருமணத்திற்குப் பிறகு கிளாமர் நடனத்தில் சாயிஷா

தமிழில் 2017ல் வெளிவந்த 'வனமகன்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாயிஷா. அதன் பின் 'கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி' ஆகிய படங்களில் நடித்தார். தொடர்ந்து சினிமாவில் நடிப்பதைத் தவிர்த்து சீக்கிரமே திருமணமாகி செட்டிலாகிவிட்டார்.

நடிகர் ஆர்யாவை 2019ல் திருமணம் செய்து, 2021ல் பெண் குழந்தைக்கும் தாயானார். 'டெடி' படத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்த சாயிஷா தற்போது சிம்பு நடித்து அடுத்த வாரம் வெளியாக உள்ள 'பத்து தல' படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் 'ராவடி' என்ற ஒரே ஒரு பாடலுக்கு கிளாமர் நடனம் ஆடியுள்ளார்.

இப்பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. பொதுவாக திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பின் ரீ-என்ட்ரி ஆகும் நடிகைகள் கதாநாயகியாகவோ, குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலோதான் நடிப்பார்கள். ஆனால், சாயிஷா வித்தியாசமாக கிளாமர் நடனம் மூலம் ரீ-என்ட்ரி ஆகிறார். சிறப்பாக நடனமாடும் திறமை கொண்ட சாயிஷாவிற்கு இந்த 'ராவடி' எப்படிப்பட்ட வரவேற்பைக் கொடுக்கப் போகிறது என்பது சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

மூலக்கதை