நெருக்கடியிலிருந்து சூர்யகுமார் மீண்டு வருவார்: சல்மான்பட் நம்பிக்கை

தினகரன்  தினகரன்
நெருக்கடியிலிருந்து சூர்யகுமார் மீண்டு வருவார்: சல்மான்பட் நம்பிக்கை

கராச்சி: டி20 கிரிக்கெட்டில் எதிர் அணிகளை துவம்சம் செய்பவர் சூர்யகுமார் யாதவ். இவர் ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 21 இன்னிங்சில் இரண்டு அரைசதம் அடித்திருக்கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் தொடரிலும் தொடர்ந்து கோல்டன் டக் ஆகி ரசிகர்களை விரக்தியில் ஆழ்த்தினார். சூரியகுமார் போன்ற அதிரடி வீரர் உலகக் கோப் பை அணியில் தேவை என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் 3 டக் அவுட் விமர்சனங்களை எழுப்பியது. தற்போது ஐபிஎல் தொடருக்கு சூர்யகுமார் யாதவ் தயாராகி வருகிறார். இதில் அவர் தனது பார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தொடக்க வீரர் சல்மான் பட் கூறியதாவது:- ஒரு வீரர் தொடர்ந்து 10 இன்னிங்சில் சரியாக ஆடாமல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழப்பது நிச்சயம் கவலை அளிக்கும் விஷயம்தான். சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி திறமை வாய்ந்த வீரராக நிரூபிக்கப்பட்ட ஒருவரை பார்ம் காரணமாக அணியிலிருந்து நீக்கிவிடக்கூடாது. அதற்கு மாற்றாக சம்பந்தப்பட்ட வீரரை உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வைக்க வேண்டும். இதன் மூலம் அவருக்கு சுவாசிக்க கொஞ்சம் நேரம் கிடைக்கும். உள்ளூர் போட்டிகளில் விளையாடிவிட்டு மீண்டும் அவர் வெற்றிகரமான வீரராக அணிக்குள் வர வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்று தொடர்ந்து ஒரு வீரர் தோல்வியை தழுவினால் அவருக்கு நிச்சயமாக கடும் நெருக்கடி ஏற்படும். அந்த அழுத்தத்திலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்றால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாட வைப்பது சிறந்தது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மூலக்கதை