இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவியேற்பு

தினகரன்  தினகரன்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவியேற்பு

வாஷிங்டன்: இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக, லாஸ் ஏஞ்சல்ஸின் முன்னாள் மேயர் எரிக் கார்செட்டி அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி முதல் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பதவி காலியாக  உள்ளது. கடைசியாக கென்னத் ஜஸ்டர் என்பவர் தூதராக பணியாற்றினார். அதன்பின் அந்த பதவி  காலியாக இருந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக, லாஸ் ஏஞ்சல்ஸின் முன்னாள் மேயர் எரிக் கார்செட்டியை நியமனம் செய்து அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டார். இந்நிலையில், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தலைமையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், எரிக் கார்செட்டி இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் அவரது மனைவி ஏமி வேக்லேண்ட், தந்தை கில் கார்செட்டி, தாய் சுகே கார்செட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூலக்கதை