ரொனால்டோ உலக சாதனை

தினகரன்  தினகரன்
ரொனால்டோ உலக சாதனை

சர்வதேச கால்பந்தில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற உலக சாதனை போர்ச்சுகல் அணி நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ வசமாகி உள்ளது. யூரோ 2024 கால்பந்து தொடரின் தகுதிச்சுற்றில் போர்ச்சுகல் - லிக்டன்ஸ்டைன் அணிகள் மோதிய போட்டி, ரொனால்டோ களமிறங்கிய 197வது சர்வதேச போட்டியாக அமைந்தது. குவைத் முன்கள வீரர் பாதர் அல் முடாவாவுடன் (196 போட்டி) முதலிடத்தை பகிர்ந்துகொண்டிருந்த ரொனால்டோ, தற்போது அல் முடாவை 2வது இடத்துக்கு தள்ளியுள்ளார். லிக்டன்ஸ்டைன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த அணியின் கான்செலோ 47வது நிமிடத்திலும், பெர்னார்டோ சில்வா 47வது நிமிடத்திலும் கோல் போட்டனர். ரொனால்டோ 51வது மற்றும் 63வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். சர்வதேச போட்டிகளில் அவர் இதுவரை 120 கோல் அடித்து முதலிடம் வகிக்கிறார்.

மூலக்கதை