மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீ

தினமலர்  தினமலர்
மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீ

லண்டன்-கர்நாடக இசைக் கலைஞரும், பிரபல பின்னணி பாடகியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பாம்பே ஜெயஸ்ரீக்கு, மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், பல்வேறு பாடல்களை பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ, 58.

இவர், மின்னலே திரைப்படத்தில் இடம் பெற்ற, 'வசீகரா' என்ற பாடலை பாடியதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம்ஆனார்.

இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஷ் ஜெயராஜ் உள்ளிட்டவர்களின் இசையில் பல பாடல்களை பாடிஉள்ளார்.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, இசை நிகழ்ச்சிக்காக சமீபத்தில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ சென்றார். அங்குள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த அவருக்கு, நேற்று முன்தினம் இரவு முதல் அதிகமான கழுத்து வலி இருந்துள்ளது.

இதனால் அவர் நேற்று காலை உணவையும், மதிய உணவையும் சாப்பிட வரவில்லை. அறைக்குள் சென்று பார்த்த போது, பாம்பே ஜெயஸ்ரீ சுயநினைவின்றி கீழே விழுந்து கிடந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதை அடுத்து, அவருக்கு அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இது குறித்து, பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் கூறியதாவது:

அம்மாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். அவருக்கு இரண்டு நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்த தகவல்களை தொடர்ந்து வழங்குவோம். சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின், அவர் விமானம் வாயிலாக சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

லண்டனில் நேற்று இசை நிகழ்ச்சி நடக்கவிருந்த நிலையில், பாம்பே ஜெயஸ்ரீக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது, அவரது ரசிகர்களை சோகக் கடலில் ஆழ்த்தி உள்ளது.

லண்டன்-கர்நாடக இசைக் கலைஞரும், பிரபல பின்னணி பாடகியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பாம்பே ஜெயஸ்ரீக்கு, மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.தமிழ், கன்னடம்,

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

மூலக்கதை