பாம்பே ஜெயஸ்ரீ குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் டிவிட்டரில் தகவல்!!

தினகரன்  தினகரன்
பாம்பே ஜெயஸ்ரீ குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் டிவிட்டரில் தகவல்!!

லண்டன்: லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ நன்றாக குணமடைந்து வருகிறார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.பிரபல கார்நாடக இசைக் கலைஞரும் பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக நேற்று லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பிரபல கார்நாடக இசைக் கலைஞரும், தன் மில்லிசை குரலால் அனைவரையும் மயக்கும் திறன் கொண்ட இசைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்களையும் பாடியுள்ளார். மேலும் பல்வேறு மேடை கச்சேரிகளிலும் பாடி வருகிறார். இந்நிலையில் பாம்பே ஜெயஸ்ரீ சில தினங்களுக்கு முன் இசை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்றிருந்தார். லண்டனில் ஓட்டலில் தங்கியிருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை தரப்பில் அவருக்கு மூலையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவரின் உடல் நிலை மோசமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ நன்றாக குணமடைந்து வருகிறார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படுவதாகவும் குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை