கனடாவில் மஹாத்மா காந்தி சிலை சேதம்; காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்

தினமலர்  தினமலர்
கனடாவில் மஹாத்மா காந்தி சிலை சேதம்; காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்



ஒன்டாரியோ : கனடாவில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று மஹாத்மா காந்தி சிலையை சேதப்படுத்தியதுடன், அதன் கீழே நம் நாட்டுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிராக வாசகங்களை எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரில் நிறுவப்பட்டுள்ள 6 அடி உயரம் உள்ள மஹாத்மா காந்தி சிலையை, 2012ல் நம் அரசு பரிசாக வழங்கியது.

இந்நிலையில், இச்சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் சேதப்படுத்தியதுடன், அதன் கீழே நம் நாட்டுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதியுள்ளனர். மேலும், காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

இதையடுத்து, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மர்லின் கூறுகையில், ''சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபடும் சூழலில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும்,'' என்றார்.

கனடாவில், காந்தி சிலையை சேதப்படுத்துவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே, கடந்தாண்டு ஜூலையில், டொரோன்டோவில் காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர். இது தவிர, கனடாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஹிந்து கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

ஒன்டாரியோ : கனடாவில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று மஹாத்மா காந்தி சிலையை சேதப்படுத்தியதுடன், அதன் கீழே நம் நாட்டுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிராக வாசகங்களை எழுதி வைத்த

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

மூலக்கதை