ஸ்பெயினில் வலென்சியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

தினகரன்  தினகரன்
ஸ்பெயினில் வலென்சியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

ஸ்பெயின்: ஸ்பெயினில் உள்ள வலென்சியா மாகாணத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயால் பல்லாயிரம் மரங்கள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. விளானிவாதி விவேர் என்ற இடத்தில் உள்ள பரந்து விரிந்த வனப்பகுதியில் நேற்று பற்றிய காட்டுத் தீ ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது. தீ வேகமாக பரவுவதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 15 சிறிய ரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து மீட்கப்பட்டவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக தற்காலிக மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் கடந்த ஆண்டு 493 காட்டுத் தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

மூலக்கதை