ஜீவா - அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்

தினமலர்  தினமலர்
ஜீவா  அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்

நடிகர் ஜீவா இப்போது நடிகர் மிர்ச்சி சிவா உடன் இணைந்து கோல்மால் என்று படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் பா. விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் ஜீவா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன், ராஷி கண்ணா நடிக்கின்றனர். இந்த படம் பெரிய பட்ஜெட்டில் பீரியட் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தை வேறு ஒரு நிறுவனம் தயாரிப்பு தொடங்கி சில காரணங்களால் கைவிடப்பட்டது என கூறப்படுகிறது.

மூலக்கதை