கிரிக்கெட் பயிற்சியில் ‛அட்டகத்தி' தினேஷ்

தினமலர்  தினமலர்
கிரிக்கெட் பயிற்சியில் ‛அட்டகத்தி தினேஷ்

புதுமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படம் 'லப்பர் பந்து'. இதில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். அவருடன் முக்கிய வேடத்தில் ‛அட்டகத்தி' தினேஷ் நடிக்கிறார். வதந்தி வெப்சீரிஸ் புகழ் சஞ்சனா மற்றும் சுவாசிகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகிறது. சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் இந்த படத்திற்காக கிரிக்கெட் பயிற்சியில் தினேஷ் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

மூலக்கதை