மார்ச் 31-ல் மும்பை - கோவை விரைவு ரயில் மாற்று வழியில் இயக்கம்

தினகரன்  தினகரன்
மார்ச் 31ல் மும்பை  கோவை விரைவு ரயில் மாற்று வழியில் இயக்கம்

சென்னை: மார்ச் 31-ம் தேதி இரவு 10.35-க்கு புறப்படும் மும்பை - கோவை விரைவு ரயில் (11013) மாற்று வழியில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மும்பை - கோவை விரைவு ரயில் குண்டக்கல், ரேணிகுண்டா, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக இயக்கப்படும். மும்பை - கோவை ரயில் அனந்தபூர், தர்மாவரம், ஸ்ரீசத்ய சாய், ஹிந்துபூர், பெங்களூரு, தருமபுரியில் நிற்காது.

மூலக்கதை