காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் திடிரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தம் 9 பேர் பலியாகினர். இதையடுத்து பட்டாசு ஆலையின் உரிமையாளரான நரேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர். பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை