கண்ணீர் அஞ்சலி பேனர் உடன் நடிகர் ஜி.எம்.குமார்

தினமலர்  தினமலர்
கண்ணீர் அஞ்சலி பேனர் உடன் நடிகர் ஜி.எம்.குமார்

தமிழ் சினிமாவில் அறுவடை நாள், பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற படங்களை இயக்கியவர் ஜி.எம்.குமார். அதன்பிறகு பாரதிராஜா இயக்கிய கேப்டன் மகள் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து வெயில், மலைக்கோட்டை, குருவி, அவன் இவன் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தனக்கு தானே ஒரு கண்ணீர் அஞ்சலி பேனரை பதிவிட்டுள்ளார் ஜி.எம்.குமார். அதோடு ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை என்றும் பதிவு போட்டிருக்கிறார்.

ஜி.எம்.குமார் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவர் காரியமாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதில் தான் அவர் இறந்தது போன்று ஒரு காட்சி இருக்கும் போல் தெரிகிறது. அதற்காக வைக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பேனர் முன்பு நின்று அவரே போட்டோ எடுத்து இப்படி பகிர்ந்துள்ளார். அவரின் அந்த பதிவு வைரலானது.

மூலக்கதை