சிறந்த கலை சேவைக்காக இந்திய வம்சாவளி நடிகைக்கு தேசிய மனிதநேய விருது: அமெரிக்க அதிபர் வழங்கினார்

தினகரன்  தினகரன்
சிறந்த கலை சேவைக்காக இந்திய வம்சாவளி நடிகைக்கு தேசிய மனிதநேய விருது: அமெரிக்க அதிபர் வழங்கினார்

வாஷிங்டன்: சிறந்த கலைச் சேவைக்காக இந்திய வம்சாவளி அமெரிக்க நடிகைக்கு தேசிய மனிதநேய விருதை அதிபர் ஜோ பிடன் வழங்கினார். அமெரிக்க அரசால் ஒவ்ெவாரு ஆண்டும்  தேசிய மனிதநேய விருது வழங்கப்படுகிறது. சிறந்த கலைஞர்கள், புரவலர்கள் மற்றும் குழுக்களுக்கு இந்த உயரிய விருது வழங்கப்படும். புதிய தலைமுறையினர் மத்தியில் கலையை ஊக்குவிப்பதற்காக முன்மாதிரியாக செயல்பட்ட நபர்களை அடையாளங் கண்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். அதன்படி 2021ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா வெள்ளை மாளிகையில் நடந்தது. புதிய தலைமுறை கதைசொல்லிகளுக்காக பாடுபட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க நடிகையும், தயாரிப்பாளருமான மிண்டி கலிங்கிற்கு (43), இந்த உயரிய விருதை அதிபர் ஜோ பிடன் வழங்கி கவுரவித்தார். அதேபோல் தேசிய மனிதநேய விருதுகளை அதிபர் பிடன், 11 பேருக்கு வழங்கி கவுரவித்தார்.

மூலக்கதை