கிரிக்கெட் வழியே நட்புறவு...

தினகரன்  தினகரன்
கிரிக்கெட் வழியே நட்புறவு...

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய துணை தூதரகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். தென் இந்தியாவுக்கான ஆஸி. துணை தூதர் சாரா கர்லியூ, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஷ்ரா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், எஸ்டிஏடி-ல் பயிற்சி பெறும் யு-14 சிறுவர்கள், யு-15 சிறுமிகள் கிரிக்கெட் அணியை சேர்ந்த இளம் வீரர், வீராங்கனைகளை சந்தித்து அவர்களின் பயிற்சியை மேற்பார்வையிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு நுணுக்கங்கள் குறித்த ஆலோசனைகளையும் வழங்கினர். தனது பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அருகில் துணை தூதர் சாரா கர்லியூ.

மூலக்கதை