இந்திய தூதர் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வன்முறை

தினகரன்  தினகரன்
இந்திய தூதர் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வன்முறை

துரந்தோ: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திற்கு ஞாயிறன்று கனடாவுக்கான இந்திய தூதர் செல்ல இருந்தார். அவரது முதல் வருகை என்பதால் வரவேற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் இங்கு திரண்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரும் கடுமையாக தாக்கப்பட்டார். இதனை தொடர்ந்து  பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா பங்கேற்பது ரத்து செய்யப்பட்டது.

மூலக்கதை