சீனாவிடம் கடன் வாங்குவதில் வங்கதேசம் கவனமாக உள்ளது: ஷேக் ஹசீனா தகவல்

தினகரன்  தினகரன்
சீனாவிடம் கடன் வாங்குவதில் வங்கதேசம் கவனமாக உள்ளது: ஷேக் ஹசீனா தகவல்

டாக்கா: சீனாவிடம் கடன் வாங்கும் விஷயத்தில் வங்கதேசம் மிகவும் கவனமாக உள்ளதாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.  அவாமி லீக் கட்சி தலைவரும், வங்கதேச பிரதமருமான ஷேக் ஹசீனா சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “வங்கதேசம் பெரும்பாலும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கிகளிலிருந்தே கடன்களை வாங்குகிறது. நாங்கள் வேறு எந்த நாட்டையம் சார்ந்து இருக்கவில்லை. ஆனால், வங்கதேசத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் வங்கதேசம் நெருக்கமான உறவு வைத்துள்ளது. உக்ரைன், ரஷ்ய போரால் சமானிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர உலகளாவிய நடவடிக்கைகள் அவசியம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மூலக்கதை