மகளிர் டி 20 போட்டி: உ.பி.-டெல்லி இன்று இரவு மோதல்

தினகரன்  தினகரன்
மகளிர் டி 20 போட்டி: உ.பி.டெல்லி இன்று இரவு மோதல்

மும்பை: மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றுள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளை பொறுத்தவரையில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில், இன்று (செவ்வாய்) 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்சுடன் மோதிகிறது. இதையடுத்து இரவு 7.30 மணிக்கு பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் அலிசா ஹீலே தலைமையிலான உ.பி. வாரியர்ஸ் அணி மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணி மும்பை அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் மும்பையை பின்னுக்குத் தள்ளி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது.

மூலக்கதை