வியட்நாமில் ஏழு டன் யானை தந்தங்கள் சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த நிலையில் பறிமுதல்..!!

தினகரன்  தினகரன்
வியட்நாமில் ஏழு டன் யானை தந்தங்கள் சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த நிலையில் பறிமுதல்..!!

ஹனோய்: வியட்நாம் நாட்டில் ஏழு டன் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய நாடுகளில் ஒன்றான வியட்நாமை பொறுத்தவரை தந்தம் வர்த்தகம் செய்வது, தந்தத்தை கடத்துவது என்பது சட்ட விரோதமான செயல். ஆனால், யானை தந்தங்கள், பாகோலின் செதில்கள், காண்டாமிருக கொம்புகள், புலி சடலங்கள் கடத்தப்படுவதும், பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகவே உள்ளது. இந்நிலையில், ஹைபோங் நகரின் லோம் துறைமுகத்தின் சுங்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கோலாவில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தி செல்லப்பட இருந்த ஏழு டன் தந்தங்கள் கண்டெய்னரில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கடந்த மாதம் 600 கிலோ கிராம் ஆப்பிரிக்க யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கடத்திய நபருக்கு வியட்நாம் நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை