சில்லி பாயிண்ட்ஸ்

தினகரன்  தினகரன்
சில்லி பாயிண்ட்ஸ்

*  இந்தியா 117 ரன்னுக்கு சுருண்டது, ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்த 3வது குறைந்தபட்ச ஸ்கோராக அமைந்தது. முன்னதாக சிட்னியில் 1981ல் 63 ரன்னுக்கும், 2000ல் 100 ரன்னுக்கும் ஆல் அவுட்டாகி உள்ளது.*  ஒருநாள் போட்டிகளில் 9வது முறையாக  5 விக்கெட் கைப்பற்றியுள்ள ஸ்டார்க், இந்த வரிசையில் பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் (13 முறை), இலங்கையின் முரளிதரனுக்கு (10 முறை) அடுத்த இடத்தில் உள்ளார்.*  நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 164 ரன்னுக்கு சுருண்டு ஃபாலோ ஆன் பெற்ற இலங்கை அணி, 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்துள்ளது. கை வசம் 8 விக்கெட் இருக்க, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 303 ரன் தேவை என்ற நிலையில் இலங்கை இன்று 4வது நாள் சவாலை சந்திக்கிறது.* வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 336 ரன் என்ற கடினமான இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்கா 41.4 ஓவரில் 287 ரன் எடுத்து 48 ரன் வித்தியாசத்தில் தோற்றது. தொடக்க வீரர்கள் டி காக் 48, கேப்டன் பவுமா 144 ரன் விளாசிய நிலையில், மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். வெஸ்ட் இண்டீஸ் 1-0 என முன்னிலை வகிக்க, கடைசி ஒருநாள் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் நாளை நடக்கிறது.

மூலக்கதை