தசரா படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது

தினமலர்  தினமலர்
தசரா படத்தின் சென்சார்  ரன்னிங் டைம் வெளியானது

தெலுங்கில் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் ,சமுத்திரக்கனி உட்பட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் தசரா. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மார்ச் 30ஆம் தேதி தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் தற்போது இந்த தசரா படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும், 2 மணி நேரம் 36 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை