ஜவுளி மண்டலம், ஆடை பூங்கா திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தினகரன்  தினகரன்
ஜவுளி மண்டலம், ஆடை பூங்கா திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டல திட்டத்தை சிப்காட்மூலம் செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ஆடைப்பூங்கா திட்டத்தையும் சிப்காட் மூலம் செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தை ஆடை பூங்கா அமைக்க தேர்வு செய்ததற்கு நன்றி. இ.குமாரலிங்கபுரத்தில் அமையும் ஆடை பூங்காவால் தென் மாநிலங்கள் பெரிதும் பயனடையும். சிப்காட் நிறுவனம் மூலம் திட்டங்களை செயல்படுத்தினால் நோக்கங்களை வெற்றிகரமாக அடைய இயலும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை