இந்தியா - சீனா நிலைமை. ஆபத்து தான்! மனம் திறந்தார் அமைச்சர் ஜெய்சங்கர்

தினமலர்  தினமலர்
இந்தியா  சீனா நிலைமை. ஆபத்து தான்! மனம் திறந்தார் அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடில்லி, மார்ச் 19- ''கிழக்கு லடாக்கில், இந்திய - சீன எல்லை பகுதியில், இரு நாடுகளுக்கு இடையேயான நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இரு தரப்பும் அருகருகே ராணுவ வீரர்களை குவித்துள்ளதால், எப்போது என்ன நடக்கும் என்பது சொல்ல முடியாத சூழல் நிலவுகிறது,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளார்.

நம் அண்டை நாடான சீனாவுடன், பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை உள்ளது. இது தொடர்பாக, இரு நாடுகளுக்கு இடையே, பல ஆண்டுகளாக பேச்சு நடந்து வருகிறது. எனினும், பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.

கடந்த 2020ல் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், நம் ராணுவத்திற்கும், சீன ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், நம் ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள், வீர மரணம் அடைந்தனர்; 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து, சீனாவின் மொபைல் போன் செயலிகளுக்கு, மத்திய பா.ஜ., அரசு தடை விதித்தது. கல்வான் சம்பவம் தொடர்பாக, நம் ராணுவ அதிகாரிகள் மற்றும் துாதரக அதிகாரிகள், சீன தரப்பு அதிகாரிகள் குழுவுடன் பல முறை பேச்சு நடத்தி உள்ளனர். ஆனால், இதுவரை சுமுகமான முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், ''கிழக்கு லடாக்கில் உள்ள இந்திய - சீன எல்லை பகுதியில் ஆபத்தான நிலை ஏற்பட்டு உள்ளது,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.

இது பற்றி தனியார் 'டிவி' நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் கூறியதாவது:

சீனாவுடனான உறவு, சவாலான மற்றும் அசாதாரணமான சூழ்நிலையில் உள்ளது. 1988ல் முன்னாள் பிரதமர் ராஜிவ் அங்கு சென்று வந்ததில் இருந்து, 2020 வரை எல்லையில் அமைதியான சூழ்நிலை நிலவியது.

இதை, 2020ல் சீனா மீறியது. இதன் தொடர்ச்சியாகவே கல்வான் மோதலும் நடந்தது. தற்போது, கிழக்கு லடாக்கின் மேற்கு இமயமலை பகுதியில், இந்தியா - சீனா இடையேயான எல்லை பகுதியில், நிலைமை ஆபத்தான முறையில் உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, முறியக்கூடிய வகையில் பலவீனமாக உள்ளது. லடாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் அளவுக்கு அதிகமாகவே குவிக்கப்பட்டு உள்ளனர்.
நாங்கள் அமைதியை மட்டுமே விரும்புகிறோம். அண்டை நாடுகளுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி விட்டு, பின் எதுவும் நடக்காதது போல் செயல்படுபவர்களோடு, எங்களால் நட்பை தொடர முடியாது. சீனாவுடனான பிரச்னைகள் தீர்க்கப்படும் வரை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இயல்பு நிலைக்கு திரும்பாது.இவ்வாறு அவர் கூறினார்.

புதுடில்லி, மார்ச் 19- ''கிழக்கு லடாக்கில், இந்திய - சீன எல்லை பகுதியில், இரு நாடுகளுக்கு இடையேயான நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இரு தரப்பும் அருகருகே ராணுவ வீரர்களை

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

மூலக்கதை