அசாமில் 2 முறை நிலஅதிர்வு

தினகரன்  தினகரன்
அசாமில் 2 முறை நிலஅதிர்வு

கவுகாத்தி:  அசாமில் நேற்று காலை திடீரென லேசான நிதி அதிர்வு உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். காலை 9மணிக்கு ஏற்பட்ட இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.6புள்ளிகளாக பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டது. இது 2.8ரிக்டராக பதிவாகி இருந்தது. ஜோர்ஹத் மாவட்டத்தில் உள்ள திதாபர் அருகே 50கி.மீ. ஆழத்தை மையமாக கொண்டு நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. நிலஅதிர்வினால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. நாகலாந்தின் வடமேற்கு பகுதியிலும் நிலஅதிர்வை மக்கள் உணர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை