பிஎன்பி பாரிபா ஓபன்: பைனலில் எலனா ரைபாகினா

தினகரன்  தினகரன்
பிஎன்பி பாரிபா ஓபன்: பைனலில் எலனா ரைபாகினா

இண்டியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடக்கும் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, எலனா ரைபாகினா (கஜகஸ்தான்) தகுதி பெற்றார். அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் (போலந்து) மோதிய ரைபாகினா அதிரடியாக புள்ளிகளைக் குவித்து 6-2, 6-2 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 16 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு அரையிறுதியில் பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலெங்கா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் மரியா சாக்கரியை (கிரீஸ்) 1 மணி, 23 நிமிடத்தில் வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் ரைபாகினா - சபலெங்கா மோதுகின்றனர். இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் கார்லோஸ் அல்கரஸ் (ஸ்பெயின்) - யானிக் சின்னர் (இத்தாலி), மெத்வதேவ் (ரஷ்யா) - பிரான்சிஸ் டியபோ (அமெரிக்கா) மோதுகின்றனர்.

மூலக்கதை