அதிபர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்ததால் உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரமாக்கும் ரஷ்யா

தினகரன்  தினகரன்
அதிபர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்ததால் உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரமாக்கும் ரஷ்யா

கீவ்: உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் தீவிரமாக்கி உள்ளது. டிரோன்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் -ரஷ்யா போரானது ஓரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகின்றது.  உக்ரைனில் இருக்கும் குழந்தைகள் ரஷ்யாவிற்கு நாடு கடத்தியதாக கூறப்படும் போர் குற்றத்திற்காக ரஷ்ய அதிபர் புதின் மற்றும் குழந்தைகள் உரிமை ஆணையர் மரியா லவோவா-பெலோவா ஆகியோருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அதிபருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கும் முடிவுக்கு பின்னரும் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் இரவு 16 ரஷ்ய டிரோன்கள், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் மேற்கு லிவிவ் மாகாணங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும் 16 டிரோன்களில் 11 டிரோன்கள் மேற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் ராணுவத்தின் தினசரி அறிக்கையில், 24 மணி மணிநேரத்தில் ரஷ்ய படைகள் 34 வான்வழி தாக்குதல்கள், ஒரு ஏவுகணை தாக்குதல் மற்றும் 57 விமான எதிர்ப்பு தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் கெர்சன் மாகாணத்தில் 7 குடியிருப்பு வீடுகள், மழலையர் பள்ளி ஒன்றும் சேதமடைந்தது.

மூலக்கதை