தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: தேடல் குழு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: தேடல் குழு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தேடல் குழு அறிவித்துள்ளது. துணைவேந்தர் பதவிக்கு தகுதியுள்ள கல்வியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் சுதா சேஷையன் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய கடந்த ஜனவரி முதல் வாரத்தில் தேடல் குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்புராஜ் தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டது.

மூலக்கதை