பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்

தினகரன்  தினகரன்
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்

பிரான்ஸ்: ஓய்வு பெரும் சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததை எதிர்த்து பிரான்ஸில் மக்கள் நடத்திய போராட்டம் பெரும் கலவரத்தில் முடிவடைந்தது. பிரான்ஸ் அரசு ஓய்வு பெரும் வயதினை 2 ஆண்டுகளுக்கு உயர்த்தி 64 ஆக மாற்றியுள்ளது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போ பிரதமர் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை பயன் படுத்தி வாக்கெடுப்பு நடத்தாமலேயே மசோதாவை நிறைவேற்ற செய்தார். இதன் மூலம் ஓய்வு பெரும் வயது சட்டப்பூர்வமாக 64 ஆக மாறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்  காவல்துறை வாகனங்களுக்கு தீ வைத்தனர். பதிலுக்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல் துறையினர் பொதுமக்களை கலைத்தனர்.

மூலக்கதை