மீண்டும் நிரூபித்த கே.எல்.ராகுல்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

தினகரன்  தினகரன்
மீண்டும் நிரூபித்த கே.எல்.ராகுல்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி விழ்த்தியது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 35 வர்களில் 188 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 81 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சிராஜ் மற்றும் ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்நிலையில்  189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய இஷான் கிஷான் 3 ரன்களுக்கும் சுப்மான் கில் 20 ரன்களுக்கும் ஆட்டம் இழக்க விராட் கோலி 4 மற்றும்  சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் மிகுந்த ஏமாற்றத்தை தந்தனர்.. ஹர்திக் பாண்டியா 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்  கே எல்  ராகுல் அதிரடியாக விளையாடி 75 ரன்களுடன் , ரவீந்திர ஜடேஜா 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். இறுதியில் இந்திய அணி 39.5  ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூலக்கதை