பிஎன்பி பாரிபா ஓபன் அரையிறுதியில் சபலெங்கா

தினகரன்  தினகரன்
பிஎன்பி பாரிபா ஓபன் அரையிறுதியில் சபலெங்கா

இண்டியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடக்கும் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலெங்கா தகுதி பெற்றார்.காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ காஃபுடன் மோதிய சபெலெங்கா 6-4, 6-0 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 4 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு காலிறுதியில் மரியா சாக்கரி (கிரீஸ்) 4-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் பெத்ரா குவித்தோவாவை வீழ்த்தினார். அரையிறுதியில் சாக்கரி - சபலெங்கா மோத உள்ளனர்.

மூலக்கதை