உளவு பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா: விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
உளவு பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா: விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்,-அமெரிக்காவில் பறந்த சீன உளவு பலுானை, அமெரிக்க ராணுவ போர் விமானம் நேற்று சுட்டு வீழ்த்தியது. அட்லான்டிக் கடலில் வீழ்ந்த பலுானின் பாகங்கள் மற்றும் அதில் இருந்த கருவிகளை மீட்டெடுக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

சீன உளவு பலுான், அமெரிக்க நிலப்பரப்பின் மேல், 60 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தது. இது, மூன்று பேருந்துகளின் அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. நிலப்பரப்பு மேல் இருந்து கடல் பகுதிக்கு மேல் பலுான் பறக்க துவங்கியதும், அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மூன்று விமான நிலையங்களில் விமான வருகை மற்றும் புறப்பாடுகள் நிறுத்தப்பட்டன. விர்ஜினியாவின் லாங்லே விமானப் படை தளத்தில் இருந்து பறந்து வந்த, 'எப் - 22' ரக போர் விமானம், ஒரே முயற்சியில் உளவு பலுானை சுட்டு வீழ்த்தியது. பலுானில் இருந்து சிதறி விழுந்த பாகங்கள் கடலில் 47 அடி ஆழத்திலும், மேல் பரப்பில் 10 கி.மீ., வரையிலும் பரவிக் கிடப்பதாக அதிகாரிகள் கூறினர்.



வாஷிங்டன்,-அமெரிக்காவில் பறந்த சீன உளவு பலுானை, அமெரிக்க ராணுவ போர் விமானம் நேற்று சுட்டு வீழ்த்தியது. அட்லான்டிக் கடலில் வீழ்ந்த பலுானின் பாகங்கள் மற்றும் அதில் இருந்த கருவிகளை

மூலக்கதை