அதானி மோசடியை மறைக்க பாஜ முயற்சி: மாயாவதி குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
அதானி மோசடியை மறைக்க பாஜ முயற்சி: மாயாவதி குற்றச்சாட்டு

லக்னோ: அதானி குழும மோசடியை மறைக்க பாஜ முயற்சித்து வருவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வௌியிட்டுள்ள மாயாவதி, “அதானி விவகாரம் இந்திய பொருளாதாரத்தில் ஒரு நீண்ட நெடிய பாதிப்பை ஏற்படுத்தும்.அதானி விவகாரத்தால் இந்திய பொருளாதாரம் ஆபத்தில் உள்ள நிலையில் ஒன்றிய அரசு இந்த பிரச்னையை லேசாக எடுத்து கொள்கிறது. பிரச்னைகளை மறைக்க மக்களுக்கு புதிய வாக்குறுதிகளை அளித்து மோசடியை மறைக்க முயற்சித்து வருகிறது” என்று  தெரிவித்துள்ளார்.

மூலக்கதை