மகளிர் உலக கோப்பை டி20 பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியா - ஆஸி. பலப்பரீட்சை

தினகரன்  தினகரன்
மகளிர் உலக கோப்பை டி20 பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியா  ஆஸி. பலப்பரீட்சை

கேப் டவுன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. தென் ஆப்ரிக்காவில் நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட மொத்தம் 10 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் மோத உள்ளன. பிரதான சுற்று பிப். 10ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹர்மான்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இன்று மெக் லான்னிங் தலைமையிலான பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறது. அடுத்து 2வது பயிற்சி ஆட்டத்தில் நாளை மறுநாள் வங்கதேச அணியை சந்திக்கிறது.சமீபத்தில் நடந்த முத்தரப்பு டி20 தொடரின் பைனலில் தென் ஆப்ரிக்காவிடம் போராடி தோற்ற இந்தியா, இந்த 2 பயிற்சி ஆட்டங்களையும் நன்கு பயன்படுத்தி உலக கோப்பை சவாலுக்கு தயாராகும் முனைப்புடன் களமிறங்குகிறது. இந்தியா: ஹர்மான்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணை கேப்டன்), அஞ்சலி சர்வனி, யஸ்டிகா பாட்டியா, ஹர்லீன் தியோல், ராஜேஷ்வரி கெயக்வாட், ரிச்சா கோஷ், ஷிகா பாண்டே, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிகியூஸ், ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, தேவிகா வைத்யா, பூஜா வஸ்த்ராகர், ராதா யாதவ். ஆஸ்திரேலியா: மெக் லான்னிங் (கேப்டன்), அளிஸ்ஸா ஹீலி (துணை கேப்டன்), டார்சி பிரவுன், ஆஷ்லி கார்ட்னர், கிம் கார்த், ஹீதர் கிரகாம், கிரேஸ் ஹாரிஸ், ஜெஸ் ஜோனசன், அலனா கிங், டாஹ்லியா மெக்ராத், பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, மேகான் ஷுட், அன்னபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம்.

மூலக்கதை