யோகாகுரு பாபா ராம் தேவ் மீது வழக்குப் பதிவு

தினகரன்  தினகரன்
யோகாகுரு பாபா ராம் தேவ் மீது வழக்குப் பதிவு

பார்மர்: மத உணர்வுகளை புண்படுத்தி, இரு பிரிவினருக்கிடையே பகைமையை வளர்க்கும் விதமாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில் யோகாகுரு பாபா ராம்தேவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் மாநிலம் பார்மரில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி நடந்த மடாதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய யோகாகுரு பாபாராம் தேவ், “இந்து மதம் தன்னை பின்பற்றுபவர்களுக்கு நல்லதை மட்டுமே கற்று தருகிறது. ஆனால், இஸ்லாம் மதம் தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கிறது. இஸ்லாமும், கிறித்துவமும் இந்து பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்கின்றனர்” என்று தெரிவித்தார். அவரது இந்த பேச்சு சர்ச்சையையும், அதிர்ச்சியையும் எழுப்பியது. இதுதொடர்பாக சவுஹத்தான் காவல்நிலையத்தில் பத்தய்கான் என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், மதஉணர்வுகளை புண்படுத்தி, இரு பிரிவினரிடையே பகைமையை தூண்டும் விதமாக பேசிய பாபா ராம்தேவ் மீது போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.

மூலக்கதை