சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்த விஜய் சேதுபதி

தினமலர்  தினமலர்
சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்த விஜய் சேதுபதி

தற்போது தமிழில் விடுதலை படத்தில் நடித்துள்ள விஜய்சேதுபதி, ஹிந்தியில் மேரி கிறிஸ்துமஸ், மும்பைக்கார், ஜவான் மற்றும் காந்தி டாக்ஸ் என்ற மவுன படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சாதி மதம் பார்க்காமல் ஆடம்பரம், சடங்கு, சம்பிரதாயம் இல்லாமல் சென்னையில் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற பொதுச்செயலாளர் குமரனின் திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் விஜய் சேதுபதி தனது மனைவி ஜெஸ்ஸி உடன் சென்று மணமக்களை வாழ்த்தி அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார். தனது ரசிகர் மன்ற பொதுச் செயலாளரின் திருமணத்தை மனைவியுடன் சேர்ந்து வாழ்த்தி விஜய் சேதுபதி நடத்தி வைத்த அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மூலக்கதை