2023ல் பெரிய படங்களுக்கு இசையமைக்கும் அனிருத்

தினமலர்  தினமலர்
2023ல் பெரிய படங்களுக்கு இசையமைக்கும் அனிருத்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். அவரது பாடல்கள் இன்றைய இளைஞர்களை எளிதில் கவரும் விதத்தில் இருப்பதால் முன்னணி இயக்குனர்கள் சிலரும், நடிகர்கள் சிலரும் அனிருத்தை தங்களது படங்களுக்கு ஒப்பந்தம் செய்கிறார்கள்.

இந்த ஆண்டின் சில முக்கிய பெரிய படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பாளர். ரஜினிகாந்தின் 'ஜெயிலர்', கமல்ஹாசனின் 'இந்தியன் 2' விஜய்யின் 67வது படம், அஜித்தின் 62வது படம், தனுஷின் 50வது படம் ஆகிய முக்கிய தமிழ்ப் படங்கள் அனிருத்தின் கைவசம் உள்ளன.

மேலும், ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாரூக் நடிக்கும் 'ஜவான்' படத்திற்கும், தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள 30வது படத்திற்கும் அனிருத் தான் இசை. ஏற்கெனவே யு டியுபில் அனிருத்தின் பாடல்களுக்கு அதிகப் பார்வைகள் கிடைப்பது வழக்கம். இந்த வருடம் அவருடைய முக்கிய படங்கள் வருவதால் இந்த வருடத்திலும் அவருடைய பாடல்கள் சாதனை படைக்க வாய்ப்புள்ளது.

மூலக்கதை