இலியானாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

தினமலர்  தினமலர்
இலியானாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

தமிழில் ‛கேடி' படத்தில் அறிமுகமாகி விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்தவர் இலியானா. தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். இந்த நிலையில் திடீரென அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மருத்துவமனை படுக்கையில் இருந்து கொண்டே சில செல்பி படங்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், “எனக்கு மூன்று பேக் ஐவி (IV) ஊசி போடப்பட்டுள்ளது. தற்போது நலமாக உள்ளேன். எனது உடல்நிலை குறித்து கேட்டறிந்த அனைவருக்கும் மிக்க நன்றி. சரியான நேரத்தில் எனக்கு நல்ல மருத்துவ உதவி கிடைத்தது”என்று குறிப்பிட்டுள்ளார்.

எந்த விதமான நோய் பாதிப்பு என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை. எந்த காரணத்துக்காக இலியானாவுக்கு ஐவி ஊசி செலுத்தப்பட்டது என்று தெரியவில்லை.

மூலக்கதை