ஒரு மாதத்திலேயே படப்பிடிப்பை முடித்தால் நன்றாக இருக்கும் : துல்கர் சல்மான்

தினமலர்  தினமலர்
ஒரு மாதத்திலேயே படப்பிடிப்பை முடித்தால் நன்றாக இருக்கும் : துல்கர் சல்மான்

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வருடம் மலையாளத்தில் சல்யூட், தெலுங்கில் சீதாராமம், தமிழில் ஹே சினாமிகா மற்றும் இந்தியில் சுப் என மொழிக்கு ஒன்றாக அவரது நான்கு படங்கள் வெளியாகின. இதில் சீதாராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தநிலையில் தனது ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் துல்கர் சல்மான் உரையாடினார். அவரிடம் ரசிகர் ஒருவர், இந்த 2023வது வருடத்தில் அவருடைய இரண்டு படங்களை பார்க்க விரும்புகிறேன் என்றும் அதுவும் இரண்டு பண்டிகை கால சீசனில் அவரது இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகுமா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதில் அளித்த துல்கர் சல்மான் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பையும் ஒரு மாதத்திற்குள் முடித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.. இதற்கு நான் சீரியஸாக முயற்சிக்கிறேன் ஆனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பால் என்னுடைய படங்களின் படப்பிடிப்பும் ரிலீஸ் தேதியும் தாமதமாகிக் கொண்டே வருகிறது என்று கூறியுள்ளார்.

மூலக்கதை