அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் கடும் உறைபனி: வெள்ளியை உருக்கி ஊற்றியது போல காட்சியளிக்கும் மரங்கள்

தினகரன்  தினகரன்
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் கடும் உறைபனி: வெள்ளியை உருக்கி ஊற்றியது போல காட்சியளிக்கும் மரங்கள்

அமெரிக்கா: டென்னிசி  மாகாணத்தின் மேம்பஸ் நகரில் 72 மணி நேரத்திற்கு பனி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய டெக்சாஸ் மற்றும் ஆர்கன்சாஸ் பகுதிகளின் மீது மூன்று நாள் பனிக் குவிப்பு அரை அங்குலத்திற்கும் அதிகமாக இருக்கலாம். டென்னசியின் சில பகுதிகள் கால் அங்குலத்திற்கும் அதிகமான பனிக்கட்டிகளைக் காண முடிந்தது. ஆபத்தான பயண நிலைமைகளுக்கு மேலதிகமாக, மரங்கள் சிதறி சேதமடைவது மற்றும் மின்சாரம் தடைபடுவது சாத்தியமாகும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதால் சாலைகளில் போக்குவரத்து வெகுவாக குறைத்துள்ளது. கடும் உறைபனி காரணமாக நகரம் முழுவதும் மரங்களில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல காட்சி அளிக்கிறது. இந்த மோசமான வானிலையால் வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நகரின் முக்கிய வீதிகளில் கடைகள் வைத்திருப்பவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை