அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி: உலக பணக்காரர்கள் பட்டியலில் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்

தினகரன்  தினகரன்
அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி: உலக பணக்காரர்கள் பட்டியலில் 15வது இடத்துக்கு தள்ளப்பட்டார்

மும்பை: அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. குழுமத்தின் பிரதான நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் விலை 20 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.டோட்டல் கேஸ் நிறுவன பங்கு விலை ரூ.211 குறைந்து ரூ.1897-ஆக வீழ்ச்சி, அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலை ரூ.177 சரிந்து ரூ.1595-ஆக வீழ்ச்சி, அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் விலை ரூ.121 சரிந்து ரூ.1103-ஆக வீழ்ச்சி, அதானி போர்ட் நிறுவன பங்கு விலை ரூ.57 குறைந்து ரூ.555ஆக வீழ்ச்சி, அதானி பவர் நிறுவன பங்கு விலை ரூ.11 குறைந்து ரூ.213-ஆக உள்ளது. அதானி வில்மர் பங்கு விலை ரூ.23 குறைந்து ரூ.443-ஆக வீழ்ச்சி அடைந்தது. அம்புஜா சிமெண்ட் பங்கு விலை ரூ.33 சரிந்து ரூ.368-ஆக உள்ளது. ஏ.சி.சி. நிறுவன பங்கு விலை ரூ.88 சரிந்து ரூ. 1880-ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.இந்நிலையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 10-வது இடத்தில் இருந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.சொத்து மதிப்பு சரிவால் பணக்காரர்கள் பட்டியலில் ஒரே வாரத்தில் 3-வது இடத்திலிருந்து 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதானி குழும பங்குகளின் சரிவால் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் மளமளவென சரிந்துள்ளது.

மூலக்கதை