கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஊழியர்களுக்கு போனஸை வாரி வழங்கிய சீன நிறுவனம்

பீஜிங்: கொரோனா நெருக்கடி மற்றும் உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக, உலகின் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்தும், ஊதியத்தை குறைத்தும் வருகின்றன. இந்நிலையில் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இயங்கி வரும் ‘ஹெனன் மைன்’ என்ற நிறுவனம், தனது ஊழியர்களை சிறப்பாக கவனித்து ஊக்கமளித்து வருகிறது. தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனசையும் கொடுத்து, சம்பள உயர்வையும் வழங்கியிருக்கும் நிகழ்வு பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்களை தயாரிக்கும் இந்த நிறுவனம், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. கொரோனா நெருக்கடியால் சீனாவின் பொருளாதாரம் சரிந்து வரும் அதே வேளையில் ஹெனன் மைன் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டில் மட்டும் 23 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டின் இறுதியில் அந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் 9.16 பில்லியன் யுவான் (சுமார் ரூ.11 ஆயிரத்து 86 கோடி) ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
